மாணிக்கம் என்பது சூரியனின் ரத்தினம். ஆகாய மண்டலத்திலுள்ள அனைத்து கிரகங்களும் சூரியனையே சுற்றிவருகின்றன. அதனால் சூரியன்தான் அனைத்து கிரகங் களுக்கும் மன்னர். ஒரு ஜாதகத்தில் சூரியன் நல்ல நிலையில் இருந்தால், அவர் பெரிய அரசியல்வாதியாக வருவார். அரசாங்கப் பதவி, முன்னோர்களின் ஆசிர்வாதம்,முன்னோர் களின் சொத்து வந்துசேருதல், காவல் துறையில் நல்ல பதவி, இராணுவத்தில் உயர் பதவி, ரகசிய புலனாய்வு அதிகாரி பணி, நீதிபதியாதல், மருந்து தயாரிப்பாளராக இருத்தல், பெரிய மருத்துவராதல், பெரிய விவசாயியாக இருத்தல், விண்துறையில் இருத்தல், ஆராய்ச்சியாளராதல், சிற்பக்கலைஞராதல், கவர்னர் பதவியில் இருத்தல், மர வியாபாரம் செய்தல், வைர வியா பாரியாதல், தாமிர வர்த்தகராதல், படவுலகில் புகழுடன் இருத்தல் போன்றவையெல் லாம் சூரியன் ஜாதகத்தில் நல்ல நிலையிலிருந் தால் அமையும்.

Advertisment

ஜாதகத்தில் சூரியன் பலமில்லாமல் இருந்தால் மனதில் பயம் உண்டாகும். கண்ணில் நோய் வரும். பித்தம் அதிகமாகும். உடலில் ஊனம் ஏற்படும். காதில் நோய், இதய நோய் வரும். மனதில் ஊசலாட்டம் இருக்கும். நெருப்பால் விபத்து உண்டாகும். தலையில் நோய், ஜுர பாதிப்பு ஏற்படும்.

manickam

ஒரு ஜாதகத்தில் லக்னத்தில், லக்னாதிபதியாக சூரியன் இருந்தால் ஜாதகர் அனைத்து செயல்களையும் தைரியத்துடன் முடிப்பார். 31 வயதிற்குப்பிறகு புகழுடன் திகழ்வார். எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். அந்த சூரியனை குரு பார்த்தால்- அதுவும் விசேஷமாக 5 அல்லது 9-ல் இருந்து பார்த்தால் அவர் பல பதவிகள் வகிப்பார்.

சூரியன் 5-ஆம் வீட்டில் குருவுடன் இருந் தால், அரசியலில் உயர்பதவி கிடைக்கும். சூரிய தசை அல்லது குரு தசை நடக்கும்போது ஜாதகர் சந்தோஷமாக வாழ்வார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற பதவிகளில் இருப்பார்கள். ஜாதகத்தில் சூரியன் 6-ஆம் வீட்டில் இருந் தால், ஜாதகருக்கு பகைவர்கள் இருக்கமாட் டார்கள். அப்படி இருந்தால் அழிந்து விடுவார்கள். இந்த சூரியனுக்கு குரு பார்வை இருந்தால் சிறப்பாக வாழ்வார். எதையும் தைரியத்துடன் முடிப்பார். ஆனால், அங்கு சூரியன் பலவீனமாக இருந்தால் ஜாதகருக்கு தைரியம் இருக்காது. விபத்து நடக்கும். பித்தம் காரணமாக தூக்கம் சரியாக வராது.

ஒரு ஜாதகத்தில் 7-ல் சூரியன் சனியுடன் இருந்தால், இல்வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும். கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படும்.

சூரியன், ராகுவுடன் லக்னம், 7, 8-ல் இருந் தால் வாழ்க்கையில் பல சிக்கல்கள் உண்டாகும்.

ஒரு ஜாதகத்தில் சூரியன் 9-ல் புதனுடன் இருந்தால், புதாதித்ய யோகம் உண்டாகும். அவருக்கு தன் தந்தையுடன் உறவு சரியாக இருக்காது. பலர் தந்தைவழி சொத்துகளை இழந்துவிடுவார்கள். குரு பார்வை இருந்தால் பாதிப்புகள் விலகும். புகழுடன் வாழ்வார்.

ஜாதகத்தில் 10-ல் சூரியன் இருந்தால் அரசாங்கப் பதவி கிடைக்கும். நீதிபதியாக அல்லது புகழ்பெற்ற மருத்துவராக இருப்பார். சூரியன், குருவுடன் இருந்தால் அல்லது குருவால் பார்க்கப்பட்டால் அரசாங்கத்தின் உயர்பதவியில் இருப் பதற்கான வாய்ப்பு கிட்டும்.

சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்று குருவால் பார்க்கப்பட்டால் அவர் பெரிய மருத்துவராக இருப்பார். ஒரு ஜாதகத்தில் 11-ல் சூரியன் இருந்தால், அந்த சூரியன் சுயவீட்டிலோ அல்லது உச்சமாகவோ இருந்தால், அவருக்கு ஒரேயொரு வாரிசு இருக்கும். குழந்தை பிறந்தபிறகு, தந்தைக்கு வசதிகள் உண்டாகும்.

12-ஆம் பாவத்தில் சூரியன், செவ் வாயுடன் அல்லது ராகுவுடன் இருந்தால் அல்லது சூரியன், ராகு, சனி சேர்ந்திருந்தால், பலருக்கு தாமதமாகத் திருமணம் நடக்கும். சிலருக்கு கணவன்- மனைவி உறவு சரியாக இருக்காது. இதயநோய் வரும் வாய்ப்புண்டு.

பரிகாரங்கள்

மேஷ லக்னக்காரர்களுக்கு சூரியன் 5-க்கு அதிபதி. அவர் பலவீனமாக இருந்தால் புகழ் இருக்காது. அவர் கட்டாயம் மாணிக்கத்தை அணிந்தால் நன்மையுண்டு.

சிம்ம லக்னக்காரர்களுக்கு லக்னா திபதி சூரியன் பலவீனமாக இருந்தால் உடலில் பிரச்சினைகள் உண்டாகும்.

அவர்கள் மாணிக்கத்தை அணிந்தால் உடல் நலம் சீராகும். புகழுடன் வாழ்வார்கள்.

தனுசு லக்னக்காரர்களுக்கு சூரியன் 9-ஆவது வீட்டிற்கு அதிபதி. அவர் பலவீன மாக இருந்தால் புகழ் கிட்டாது. மாணிக் கத்தை அணிந்தால் புகழ்பெறலாம்.

ஒருவருக்கு சூரிய தசை நடந்தால் அல்லது ஜாதகத்தில் சூரியன் நீசமாக இருந்தால் அவர் பயத்துடன் இருப்பார். மாணிக்கத்தை அணிந் தால், மன பயம் நீங்கி, மகிழ்வுடன் வாழ்வார்.

செல்: 98401 11534